இலங்கையிலுள்ள தமது குடும்பத்தாருடன் தொடர்பு கொண்ட இவர்கள் தாம் சுகமாக இருப்பதாக மாலைதீவு துறைமுகத்திலிருந்து அறிவித்துள்ளார்கள்.
கடந்த வருடம் டிசம்பர் 24ந்திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒளுவிலில் இருந்து ஆறு மீனவர்களுடன் புறப்பட்ட இவர்கள் கடற்பரப்பில் அலைந்து கொண்டிருந்த நிலையில், இவாகள் உறவினர்களுக்கு இவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை.
இந் நிலையில் எரிபொருளும் தீர்ந்து போக, இவர்கள் நிலமை மிகவும் மோசமாகியது. இவர்கள் மாலைதீவுக் துறைமுகத்தை நெருங்கியபோது, கரையோரக் கவலாளிகள் இவர்களை அடையாளங் கண்டு, ஒரு படகைத் துறைமுகத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்கள்.
இந்தப் படகில் மூவர் இருந்த போதிலும் மற்றைய படகிலுள்ளவர்களுக்கு ஒருவர் சென்று உதவ முற்பட்டபோது, காற்றில் இழுபட்டுச் சென்ற அந்தப் படகோடு இவரும் மறைந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது.