குறித்த சம்பவத்தில் கரம்பொன் கிழக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த சைமன் றொனால்ட் றொசைறோ ,வயது-33 என்பவரே மரணமடைந்தவராவார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தர்க்கம் காரணமாக அளவுக்கதிகமான மருந்து வில்லைகளை உட்கொண்டதாகவும் இதனால் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இவரது மரணம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.