திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் பிரதேச சபைக்கு சொந்தமான கட்டட தொகுதி ஒன்றில் படையினர் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளதால் மக்கள் இயல்புவாழ்விற்கு இடையூறாக காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.மூதூர்பகுதியில் இந்த கட்டடதொகுதியில் சந்தை பயன்பாடு ஈடுபட்டு வந்துள்ளபோது போரின் போது சேதமடைந்துள்ளது.
இதனை பொதுமக்கள் தங்கள் செலவில் புனரமைத்து வந்து பொருட்களை போட்டு விற்பனை செய்துவந்துள்ளார்கள். இன்னிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் குறித்த கட்டட வளாகத்திற்கு சென்ற படையினர் குறித்த கட்டத்தினை சுற்றி வேலிஅடைத்து நிலைகொண்டுள்ளார்கள்.
மூதூர்பகுதியில் அதிகளவான படையினரின் பயிற்சி முகாம்கள் காணப்படுகின்ற போதும் குறித்த பகுதியினை சுற்றி விதவைபெண்கள் ஆண்களின் துணையின்றி வாழ்ந்துவருகின்றார்கள் இவ்வாறான இடத்தில் படையினர் நிலை கொண்டுள்ளமையானது குறித்த குடும்ப பெண்களின் இயல்பு வாழ்விற்கு இடையூறாக அமையும் என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள்.