எதிர்வரும் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட மாட்டாது என்று அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார். மாறாக இந்த தினங்களில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு உடன்படிக்கையே ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கரைத்துறைப்புற்று மற்றும் புதுக்குடியிருப்பு தேர்தல்கள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ள நிலையில், நாட்டில் எந்த ஒரு கட்சியையும் அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் பதிவு செய்ய முடியாத நிலையில், தொடர்ந்து புரிந்துணர்வின் அடிப்படையிலேயே கட்சியின் பணிகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.