2013ம் ஆண்டில் ஓகஸ்ட் வடமாகாணசபை தேர்தலின் போது குமாரு சர்வானந்தன் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த மற்றொரு சக வேட்பாளரான அங்கயனின் அதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாக கூறிய சர்வானந்தன் கைது செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவத்தினில் தற்போதைய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயனின் தந்தையாரான இராமநாதனே துப்பாக்கி சூட்டை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.அப்போது கைதான இராமநாதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அங்கயனின் மெயப்பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துமிருந்தார்.
குறித்த துப்பாக்க சூடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளின் தொடர்ச்சியாகவ இரவோடிரவாக சர்வானந்தன் அண்மையினில் கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னைய மஹிந்த ஆட்சி காலப்பகுதியினில் இராணுவப்புலனாய்வு பிரிவின் செல்லப்பிள்ளையான சர்வானந்தன இருந்திருந்ததுடன் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி கத்துருசிங்காவின் சகாவாகவும் இருந்திருந்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னராக விஜயகலாவுடன் இணைந்து அவரது வெற்றிக்காக சர்வானந்தன் பாடுபட்டுமிருந்தார்.
இந்நிலையில் கைதான சர்வானந்தன் விஜயகலாவின் சிபார்சில் வைத்திய சிகிச்சைக்கென வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கு எந்தவித கட்டுப்பாடுகளோ கண்காணிப்புக்களோ இன்றி கைத்தொலைபேசி வழி உரையாடும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ஸ்ரீலங்காவின் சட்டமொழுங்கை அம்பலப்படுத்தியுள்ளது.