யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியான கொட்டடியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவரை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ம.ஜதீசன் மற்றும் க.பிரதீபன் ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். வெள்ளிக்கிழமை யாழ்.நகரில் இடம்பெற்ற தனியார் வானொலி நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அவர்கள் பின்னர் வீடு திரும்பியிருக்கவில்லையென கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவர்களின் குடும்பத்தினர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.