இதனை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின்போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றபோதும் இலங்கை அதனை மறுத்துவருகிறது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் போரின்போது கொத்துக்குண்டுகளை பயன்படுத்தவில்லை என கூறிவருகின்றது.
எனினும், இறுதிப்போர் இடம்பெற்ற இடங்களில் இருந்து கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்ணி வெடியகற்றும் பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
எனவே, இலங்கை அரசாங்கம் கொத்தணி முனையங்களின் தலைமையாளர் என்ற அடிப்படையில் இந்த விடயத்துக்கு பதிலளிக்க வேண்டும் என யஸ்மின் சூக்கா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.