சட்டவிரோத முகாம்களில் உள்ள தமிழர்களின் விடுதலைக்காக கண்டன ஆர்ப்பாட்டம்.


சிறப்பு முகாமில் உண்ணா நிலைப் போராட்டம் செய்த செந்தூரனை கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக அரசு. சிறப்பு முகாமில் சட்டவிரோதமாக பல ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் . இதனால் ஈழத் தமிழர்கள் சொல்லவொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் . தமிழக அரசு ஈழம் கிடைக்க பொது வாக்கெடுப்பு நடத்த தீர்மானம் இயற்றி விட்டு தமிழகத்தில் ஈழத் தமிழர்களை சித்திரவதை முகாமில் அடைத்து வைத்து வேடிக்கை பார்க்கிறது.

இதை கண்டித்து வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் பல தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் . செந்தூரன் உள்ளிட்ட அனைத்து ஈழத்து உறவுகளையும் சிறப்பு முகாம்களில் இருந்து உடனே  விடுதலை செய்யவும் , சிறப்பு முகாம்கள் அனைத்தையும் இழுத்து மூடவும் கோரிக்கை வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .

தமிழின உணர்வாளர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது .

தமிழ் தேசிய கூட்டமைப்பு
Comments (0)
Add Comment