திருகோணமலை, மூதூர் கிழக்கு சம்பூரில் அமைய உள்ள நிலக்கரி மின் நிலையத் திட்டம் வேண்டாம் எனக் கோரி சம்பூர் மீள் குடியேற்ற கிராம மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சம்பூர் அரசடி விநாயகர் கோயிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக மட்ட பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனிடம் கையளித்து அவருடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.