சம்மந்தனிடம் மன்னிப்பு கேட்ட சீ.வீ.கே சிவஞானம்

வட மாகாண சபையின் தவறுக்காக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் வருத்தத்தை தெரிவித்ததாக வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் முதலாவதாக சபையில் தீர்மானித்தப்படி, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் வடக்கின் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கொழும்பில் வைத்து இந்த முன்மொழிவுகளை வழங்கினர் இதன்காரணமாக நேற்று வடக்கு மாகாண சபை அமர்வின் போது குழப்பநிலை ஏற்பட்டது.

மாகாண சபை உறுப்பினர்கள் இது தொடர்பில் கடும் வாத பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து கருத்துரைத்த சபையின் தவிசாளர் சீ.வி.கே சிவஞானம், நடந்த தவறுக்காக எதிர்கட்சி தலைவர் சம்பந்தனிடம் தமது வருத்தத்தை வெளியிட்டதாக குறிப்பிட்டார். இந்த நிலையில், வடமாகாண சபையில் ஏற்கனவே தீர்மானித்தப்படி எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் வடமாகாண சபையின் அரசியல் அமைப்பு முன்மொழிவுகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என சீ.வி.கே சிவஞானம் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

இரா சம்மந்தன்எதிர்கட்சிசபைசீவீகே சிவஞானம்தலைவர்தவறுதவிசாளர்மன்னிப்புவடமாகாணம்
Comments (0)
Add Comment