சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்!

இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக் குறித்து ஐக்கிய நாடுகள் சபை முன்னிலையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நகரில் போராட்டம் நடைப்பெற்றது.

மேலும் போர்குற்றத்தை முன்னின்று நடத்திய மகிந்த ராஜபக்சேவின் சிங்கள அரசிற்கு தண்டனை வழங்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் நடந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபைநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்போராட்டம்போர்க்குற்ற விசாரணைலண்டன்வெஸ்ட்மினிஸ்டர்
Comments (0)
Add Comment