சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சிறிலங்கா அரசின் எந்த செயற்பாடுகளை முன்னேற்றம் என்கிறது? – சுனேஸ்

இலங்கை அரசாங்கத்தினால் மக்களுக்கு இன்னும் பல முன்னேற்றச் செயற்பாடுகள் செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தினால் மக்களுக்கு இன்னும் பல. முக்கியமான முன்னேற்றச் செயற்பாடுகள் செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளன் புதிய அரசாங்கத்திற்கும், இலங்கை நாட்டிற்கு வருகை தரும் சர்வதேச மனித உரிமை நிறுவன தலைவர்களும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னேற்றகரமான பல செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எந்த செயற்பாடுகளை வைத்துக் கொண்டு இலங்கையில் புதிய அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்துள்ளார்கள் என கூற வருகின்றார்கள் என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் வினவி நிற்கின்றேன்.

1.மக்களை நகர புறக்களில் இருந்து அகற்றி அரசுக்கு வருமானம் தரக்கூடிய விதமாக சுற்றுலா விடுதிகளை அமைப்பதா முன்னேற்றகரமான செயற்பாடு???

2. பல மாவட்டங்களில் மீனவர்களின் துறை முகங்கள் அபகரிக்கப்பட்டு மீனவர்களை அந்தரிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பது முன்னேற்றகரமான செயற்பாடு???

  1. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் தங்க வைத்து அரசியல்லாபம் தேடுவதற்காக தேர்தல் காலங்களில் அவர்களை பகடக்காய்களாக பயன்படுத்தி வாங்கு பிச்சை வாங்குவதா முன்னேற்றகரமான செயற்பாடு?

4. மக்களின் சொந்த பூர்விக நிலங்களை அபகரித்து மக்களை காடுகளிலும், முகாம்களிலும் , குடியமர்த்துவதா முன்னேற்றகரமான செயற்பாடு?

5. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், மற்றும் சாட்சியுடன் சரணடைந்தவர்கள் பற்றி அரசு பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்ளுவது முன்னேற்றகரமான செயற்பாடா??

இது போன்று பல விதமான காரணிகளை முன் வைக்கலாம்.

ஆனால் இன்று இலங்கைக்கு வரும் சர்வதேச இராஜதந்திரிகள் பலர் சுற்றுலா விடுதிகளையும், நகர புற அபிவிருத்திகளையும் , கட்டிடங்களையும், துறை முகங்களையும், நெடுஞ்சாலைகளையும், வீதிகளையும் பார்த்து அரசாங்கம் மக்களுக்கு பல முன்னேற்றகரமான வேலைகளை செய்திருக்கின்றார்கள் என்றால் மக்கள் இந்த அபிவிருத்தியால் எவ்விதமான நன்மைகளை அடைந்துள்ளார்கள் என முற்று முழுதாக ஆராய வேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்திற்கும், இந்த அபிவிருத்திக்கு பணம் கொடுக்கின்ற நாடுகளும் கவனத்தில் எடுத்து செயற்படுத்த வேண்டும்.

இன்று இலங்கையில் 25 மாவட்டங்கள், 9 மாகாணங்கள் இருக்கின்றது, இந்த மாவட்டங்களில் ,மாகாணங்களில் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்த வேண்டிய அபிவிருத்திகள் பல இருக்கத்தக்கதாக இந்த அரசாங்கம் அரசாங்கத்திற்கு வருமானம் தரக்கூடிய அபிவிருத்திகளுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்றார்களே தவிர பாமர மக்களின் வாழ்கைகளுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுத்துவது இல்லை என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இன்று அரசாங்கத்திற்கா அல்லது மக்களுக்கா உலக நாடுகள் கொடுக்கின்ற நிதி செலவு செய்யப்படுகின்றது..

இன்று மக்களை அபிவிருத்தி செய்யாமல் நகரங்களையும், துறைமுகங்களையும், வீதிகளையும் அபிவிருத்தி செய்வதில் என்ன பயன் இருக்கின்றது என யாவரும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

இதை விட புதிய அரசாங்கம் மக்களுடைய விடயத்தில் இன்னமும் பலதரப்பட்ட முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்ய முன்வர வேண்டும் குறிப்பாக

1.பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படுதல்,

2.அந்த சட்டத்தின் கீழ் மேலும் கைதுகள் இடம்பெறுவதை தடுத்தல்,

3.அரசியல் கைதிகளின் விடுதலை,

4.போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த நேர்மையான சர்வதேச விசாரணை.

5 காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்பு கூறல்.

6. சரணடைந்தவர்களின் நிலை பற்றிய உண்மை நிலவரம்.

7.குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனை தீர்ப்பு  (பக்கசார்பில்காத)

8. இடம் பெயர்ந்த மக்களை தங்களின் பூர்விக காணிகளில் மீள்குடியேற்றம் செய்தல்.

9. அபகரித்த. காணிகளை இராணுவதிடம் இருந்து மீளவுமஸ மக்களுக்கு ஒப்படைத்தலும், மீள்குடியேற்றம் செய்தலும்.

10. இராணுவ மயமாக்களை வட, கிழக்குல் இருந்து அகற்றி காவல்துறையினருக்கான அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்.

11. மீனவர்களின் துறைமுகங்களை மீனவர்களின் பாவனைகளுக்கு கையளித்தல்.

12. வட பகுதி மீனவர்களின் நன்மை கருதி தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், இந்திய இழுவைப்படகு, தென்னிலங்கை மீனவர்களின் வருகைகளை தடைசெய்தல்.

13. யுத்தத்தினால் கணவரை இழந்த பெண்களுக்கான நிரந்தர வாழ்வாதார தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

14. மாவட்ட மட்டத்தில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பேட்டைகளை ஆரம்பித்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இன்னமும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக காணப்படுகின்றன.

இவ்வாறு பல ஆக்கப்பூர்வமான விடயங்களில்  புதிய அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் மக்களின் நலன் கருதியும், மக்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் சிந்தித்து  சகல இன மக்களையும் சரியானதொரு நிலைப்பாட்டிற்குள் கொண்டு வர புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் ஆதரவாகவும், வலிமை சேர்க்கக்கூடிய வகையிலும் ஒத்தாசை வழங்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் கேரிக்கை விடுத்து நிற்கின்றேன்.

இது மட்டுமல்லாது வரவு செலவு திட்டங்கள் தயாரிக்கின்ற போது அரசாங்கத்திற்கு வருமானம் பெற்றுக் கொள்ளக்கூடிய திட்டங்களுக்கே அதிக நிதியினை செலவு செய்கின்றார்கள், பாமர மக்களின் எந்த ஒரு செயற்பாடுகளுக்கும் போதியளவு நிதி பங்கீடு செய்வதில்லை இவ்வாறாக அமையுமாக இருந்தால் இலங்கை நாடும் இன்னும் சில ஆண்டுகள் கழிந்த பிறகு சோமாலியா நாட்டை போல பசி கொடுமைகளுக்கும்,நோய்களுக்கும் ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படும் என்பதில் ஐயமில்லை.

எனவே எதிர் வரும் ஆண்டுகளில்  அரசாக்கம் முதலில் மக்களின் நலன் கருதி வரவு செலவு திட்டங்களை உருவாக்கி, மக்களுக்கு முதலில் தேவையான அபிவிருத்திகளையும், பிரச்சினைகளையும் தீர்த்து சர்வதேச நாடுகளின் நிதி மூலமாக இலங்கை நாட்டின் பெரியலாவிளான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் வேண்டுகோள் விடுத்து நிற்கின்றேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கைசிறிலங்கா அரசுசுனேஸ்புதிய அரசாங்கம்மனித உரிமை கண்காணிப்பகம்
Comments (0)
Add Comment