சவேந்திர சில்வா உள்ளிட்ட 67 இனப்படுகொலையாளர்களை கைதுசெய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிவுறுத்தல்…

யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள  இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, உட்பட , 67 இராணுவ உயரதிகாரிகளை கைதுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் விடுத்துள்ளார்.

17 நாடுகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், அவர்கள் அனைவரும் குறித்த நாடுகளுக்கு வந்தால் கைதுசெய்யுமாறும்  வலியுறுத்தியுள்ளார்.

அதோடு அவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட்   குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும், ஐ.நா. ஆணையாளரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடன்படவில்லையென  சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.

யுத்தக்குற்றத்திற்குள்ளான இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகளை சர்வதேச நீதமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என, சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

 

இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை  இவ்வாறான அறிவுறுத்தலை இதற்கு முன்னர் பதவியில் இருந்த எந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்சவேந்திர டி சில்வாசெண்பகம்யஸ்மின் சூக்கா
Comments (0)
Add Comment