அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் எழுக தமிழ் போராட்டத்தின் ஊடாக தமது நியாயமான கோரிக்கைகளை மிகத் தெளிவாக முன்வைத்தார்கள்.
வடக்கு கிழக்கு என்பது இணைக்கப்படவேண்டும்.ஒரு சமஷ்டி அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் காணமல்போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டு தீர்வுகள் கண்டறியப்படவேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
கிழக்கு மாகணத்தில் அவ்வாறானதொரு எழுக தமிழை நடத்துவதற்கு தமிழ்மக்கள் வேரவையும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்மக்கள் விடுதலை கழகம், மற்றும் தமிழரசு கட்சியினுடைய ஒரு பிரிவினர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்ற சகலரும் இணைந்து கிழக்கு மாகாணத்திலும் எழுக தமிழ் பேரணியை நடாத்துவற்கான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும், பல்வேறுபட்ட கிராமங்களிலும் அதற்கான பிரச்சிராங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்பது தமிழ் மக்கள் முன்வைத்த கோரிக்கை.இன்றைய காலகட்டத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் ஊடாகவும், அரசாங்கத்தின் மேலாதிக்க எண்ணங்களின் ஊடாகவும் வடக்கையும் கிழக்கையும் முற்றுமுழுதாக சிங்கள பௌத்த மாகாணங்களாக மாற்றக் கூடிய சூழ்நிலை இருக்கின்ற ஒரு நிலையில் வடக்கு கிழக்கு என்பது இணைவதனூடாக மாத்திரம் தான் தமிழ் மக்கள் மாத்திரமல்ல தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் கூட தங்களது இனத்துவ அடையாளங்களை காப்பாற்றிகொண்டு ஒரே மொழி பேசக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் அந்த மண்ணில் அவர்கள் சுதந்திரமாகவும்,கௌரமாகவும், வாழ முடியும் என குறிப்பிட்டுள்ளார்.