தமிழீழத்தின் காவலர்கள் என்ற பெயரிலான துண்டுப்பிரசுரங்களை அரசுக்கு எதிராக வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பளைப்பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
“அன்பான தமிழ் மக்களே இன்றைய காலம் சுதந்திரத்திற்கான போராட்ட பயணத்தில், அகிம்சைப் போராட்டத்திற்கான காலம் என்றவாறு தொடரப்பட்டு ,தமிழீழத்தின் காவலர்கள்”
என்று குறிப்பிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களை சிறீலங்கா அரசுக்கு எதிராக வெளியிட்டார்கள் என்ற குற்றத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டு பளை சிறீலங்கா காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.