சுவிஸ்லாந்தின் Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கல்லறை வளாகத்தினை விரிவாக்கம் செய்ய முடியாத காரணத்தினாலேயே இந்த முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு Burgdorf நகர குடியிருப்பாளர்கள் நகர நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு குறித்த கல்லறை வளாகத்தில் அவர்களின் உறவினர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட இந்த தடை உத்தரவானது இப்பகுதியில் உள்ள தமிழர்களையே வெகுவாக பாதித்துள்ளதோடு, இந்த விடயம் தொடர்பில் உரிய வகையில் எடுத்துக் கூற இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்தே இந்த தடை உத்தரவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு துவக்கத்தில் இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு, குறித்த பிரச்னைக்கு முடிவு ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.
இதனால் நகர நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்தது, மட்டுமின்றி சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியது.
இருப்பினும் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வையும் நகர நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சூழலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றால் முற்றாக புறக்கணிக்கப்படுவோம் என அங்குவாழும் தமிழர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.