ஜனாதிபதிக்கெதிராக யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய விசேட அதிரடிப்படை!

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 20 நாட்களாகத் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தர கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இன்று(14) கறுப்புக் கொடி ஏந்திக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு இதன்போது கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற யாழ்.கே.கே. எஸ் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில், துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப்படை பல தடவைகள் நீண்ட வரிசையில் மோட்டார் சைக்கிள்களில் வட்டமிட்டுள்ளன.

அனுராதபுரம்உண்ணாவிரதப் போராட்டம்மைத்திரிபால சிறிசேனவிசேட அதிரடிப்படை
Comments (0)
Add Comment