தண்டவாளத்தில் தூங்கிய இருவர் ரயில் மோதி பலி!

கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் கல்வியங்காட்டைச்சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17) திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (வயது 18) ஆகிய இரு இளைஞர்களே பரிதாபகரமாக உயிரிழந்தவர்களாவர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயில் கோண்டாவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் மீது ரயில் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் ஸ்ரீ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர்கள்கோண்டாவில்தண்டவாளம்பலிபோலீஸ்மோதியாழ்ரயில்விசாரணை
Comments (0)
Add Comment