சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஈழ ஏதிலிகள் ஏழு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த ஏழு நபர்களும் காங்கேசந்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் ஈழ ஏதிலிகள் என்றும் மற்றும் இருவர் அவர்களை அழைத்துசென்ற மாலுமிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் தொண்டமணாறு, திருகோணமலை மற்றும் குருநாகல் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் சென்ற படகு இலங்கை கடல் எல்லையில் பழுதடைந்த நிலையில் , பருத்தித்துறை மீனவர்களின் உதவியுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை போர் சூழல் காரணம்மாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமைடைந்த பலர் தற்போது நாட்டிற்கு திரும்பி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.