யாழ் கடலில் தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது!

யாழ் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக  மீனவர்கள் 8 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காரைநகருக்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

ஊர்காவற்துறைகாரைநகர்கைதுதமிழக மீனவர்கள்நெடுந்தீவு
Comments (0)
Add Comment