தமிழரால் ஆட்சியை கைப்பற்றிய அரசு தமிழ் மக்களுக்கு பயனுள்ள எதனையும் செய்யவில்லை…! மேதின கூட்டத்தில்- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று வடமாகாண கூட்டுறவாளர் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கம் இணைந்து கிளிநொச்சியில் நடாத்திய வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் .
அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் மக்களின் ஆதரவாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பாலும் தற்ப்போது ஆட்சிக்கு வந்த இரு பெரும் கட்சிகள் இணைந்து நல்லாட்சி எனும் பேரில் ஆட்சியை அமைத்து தமிழ் மக்களின் ஒரு சில காணிகளை விடுவித்தது மட்டுமே ஒழிய இராணுவத்தை வெளியெற்றவோ சிறைக்கைதிகளை விடுவிக்கவோ காணாமல் போனோர்தொடர்பான சரியான விசாரணைகளை மேற்க்கொள்ளவோ அல்லது தமிழினத்துக்கு நிரந்தரமான தீர்வை கூட வழங்கவில்லைஎம் மக்களுக்கு சரியான தீர்வை வழங்கக்கூடாது என்ற முடிவிலே உள்ளார்கள் அண்மையில் வட மாகாண சபையால் தமிழ்மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான அறிக்கைக்கு அதுதொடர்பாக பரிசீலணை செய்யாது மாறாக வடமாகாண முதலமைச்சர் உட்பட மேலும் ஐவருக்கு வழக்கு தொடர்ந்து எம்மை தொடந்தும் ஏமாற்றி வருகின்றார்கள். இவற்றிற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதற்க்கு முதலில் நாங்கள் எம் இனம் என்ற ரீதியில் ஒற்றுமையுடன் செயற்ப்பட வேண்டும் தொழிலாளர் தினத்திலே தொழிலாளிகளான நாமும் எமது பிரசேத்தை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல உண்மையாக உழைப்போம் என தெரிவித்தார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் கூட்டுறவாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாணா கூட்டுறவு அமைச்சர் அவர்கள் சரிய்யான தீர்வை வழங்க வேண்டும்.
எமது எதிர்பார்ப்பும் அதுவே ..! அதுபோல விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதாலும்இந்திய இழுவைப்படகுகளின் படகுகளின் ஆக்கிரமிப்பாலும் எமது மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுங்காணப்பட வேண்டிய நிலை உள்ளது எமது பிரதேசத்திலே போதுமான வளங்களும் தொழில் நிபுனர்களும் உள்ள நிலையில் உள்ளக உற்ப்பத்தியை விருத்தி செய்து தொழில் இல்லாதவர்களுக்கும் இளைஞ்ர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள் கூடியதாக இருக்கும் அதற்க்கான நகர்வை நாம் ஏற்ப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இந்த மேதின கூட்டத்தை ஒழுங்கு செய்த ஏற்பாடடு குழுவினருக்கு நன்றியைத்தெரிவித்து கோள்கின்றேன்
இந்த கூட்டத்தின் விசேடம் என்னவென்றால் வடக்கின் சகல மாவட்டமும் இணைந்து கூட்டுறவாளர்கள் அதன் சேவையாளர்கள் இணைந்து மாபெரும் மேதின பேரணியை ஒழுங்கு செய்திருந்தார்கள். உண்மையில் கூட்டுறவாளர்களின் சேவைஅளப்பெரியது அதனை மக்கள் உணர்ந்து கொண்டது போர்க்கால சூழலில் இறுதிகட்டத்தில் எம்மின மக்கள் பசி பட்டிணியால் அவதிப்பட்ட வேளையில் இவர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து அர்பணித்து செயற்ப்பட்டார்கள் இதற்க்கு எனது நன்றிகளையும் மென்மேலும் இவர்களின் சேவை சிறக்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். எனவும் கூறி தனது உரையை முடித்தார்