தமிழர்களின் உரிமைகளுக்காகவும் தாயக விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மாவீரர்களை நினைவுகூர்ந்து மாலை 06.05 க்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
வவுனியாவிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் யுத்தத்தில் இறந்து வீரர்கள் மற்றும் பொதுமக்களினை நினைவு கூர்ந்து இன்று உணர்வுபூர்வமாக நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் ‘நவ 27’ என சுடர் ஏற்றப்பட்டதுடன் தமிழர் தாயகத்தை குறிக்கும் வகையிலான உருவமும் மெழுகுவர்த்தியினால் அலங்கரிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டிருந்தது.
மேலும் முல்லைத்தீவு கடற்கரை பகுதியிலும் தீபம் ஏற்றி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.