இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்கின்ற கோரிக்கை அடங்கிய மகஜர் நேற்றைய தினம் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கையளிக்கப்பட்டுள்ளது.
மூன்று விடயங்கள் உள்ளடங்கிய ஆறு தமிழ் கட்சிகளினால் கைச்சாத்திடப்பட்ட மகஜரே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படவேண்டும், சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நியமிக்கப்படவேண்டும், 30-1 மற்றும் 34-1 ஆகிய தீர்மானங்கள் அமுல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐ.நா.ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவேண்டும் என்றும் குறித்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை குறித்த பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளினால் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசதரப்பில்ம் ஜெனிவா சென்றுள்ள அரச தரப்புப் பிரதிநிதிகளான வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் ,
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விருந்துபசாரம் ஒன்றை வழங்கி கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.