தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சிதமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாகைகளில் பல்லின மக்களுக்கு இச் செய்தியை கொண்டுசெல்லும் முகமாக வாசகங்கள் யேர்மன் மொழியிலும் , ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது.
அதோடு இளையோர்களால் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
இதேவேளை மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும்,
எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாக நிகழ்வு நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.