தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் : தமிழரசுக்கட்சி கோரிக்கை

இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தனை நியமிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  கட்சியின் இலச்சினையின்றி அனுப்பப்பட்ட கடிதத்திலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.   இந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும் அமைச்சுப் பதவிகளை ஏற்று கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன அமைச்சரவையில் கூட்டாக பொறுப்புக்களை ஏற்கவுள்ளன.

எனவே 16 ஆசனங்களுடன் அடுத்தபடியாக நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைஎதிர்க்கட்சித் தலைவர்சம்பந்தன்தமிழரசுக்கட்சிதமிழ்த்தேசியக் கூட்டமைப்புபதவி
Comments (0)
Add Comment