கடந்த 16.11.2015 முதல் 10 downing street Westminster London Sw1A 2AA என்னும் இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தரும்வகையில் லண்டன் வாழ் தமிழ்மக்கள் பெருமளவில் சுழற்சி முறையில் கலந்து கொள்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களை வேற்றுயின மக்களும் வந்து சந்தித்து போராட்டத்திற்கான காரணத்தை கேட்டறிந்து தமது தார்மீக ஆதரவை தந்தமையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. போராட்டமானது இன்று மாலை 7மணிக்கு நிறைவுபெறும்.