தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இராணுவ பயிற்சி முகாம்களில் கொடுக்கப்பட்ட பயிற்சியின் போது மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் நடத்துனர் நஜித் இந்திக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சிகளை நிறுத்துவதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நடத்துனர் தெளிவுபடுத்தினார்.

இந்திக்கஉடனடிகொடுமைகள்சம்மேளனம்தலைமைத்துவநஜித்பயிற்சிபல்கலைக்கழகம்மாணவர்கள்வழங்கல்விசாரணைவேண்டுகோள்வேண்டும்
Comments (0)
Add Comment