கடந்த காலத்தில் இருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு பாரிய கஷ்டங்கள் ஏற்பட்டதாகவும் அவற்றை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் மாகாணசபை பன்முகப் படுத்தப்பட்ட நிதியுதவியின் கீழ் உதவி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ஒரு நல்லாட்சியை நோக்கி சகல கட்சிகளையும் உள்ளடக்கி செயற்படுவதனால் தமிழ் மக்கள் ஓரளவு சுதந்திரமாகவும், சுயமாக வாழ்வாதார ரீதியில் செயற்படக் கூடியதாகவுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரைகாலமும் இந்நாட்டிலே புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.
அத்தீர்வுக்காக தமது தலைவர்கள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள், எமது தமிழ் மக்களுக்காக மிகவிரைவில் ஒரு சிறந்த தீர்வினை நாம் எதிர் கார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.