தாய்ப் பால் புறக்கேறி 2 மாத குழந்தை பலி!

தாய்ப்பால் புரைக்கேறி 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதுடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் சஞ்சி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு, உறங்க வைத்துள்ளார். மறுநாள் அதிகாலை குழந்தையை பார்த்தபோது மூக்கின் ஊடாக பால் வடிந்திருந்த நிலையில், எந்த அசைவும் இன்றி இருந்துள்ளதுடன், உடனடியாகக் குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டுச் சென்றுள்ளனர்.

எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குழந்தைதாய்ப்பால்பலிமூச்சுத்திணறல்
Comments (0)
Add Comment