திட்டமிட்டு தேர்தல் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவான சுவரொட்டிகள் யாழ்.நகர் பகுதியில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. “ஆண்ட இனம் மீண்டும் ஆள்வதற்கும் மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும். எமது உறவுகள் மீண்டும் புனர்வாழ்வு முகாம் செல்வதை தடுத்திடுவோம் ”துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது என சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்.நகர்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

திட்டமிட்டு தேர்தல் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு, தேர்தல் திணைக்களத்திடம் இதுதொடர்பில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆதரவுஒட்டப்பட்டுள்ளதுசுவரொட்டிஜனாதிபதிதேர்தல்மஹிந்தயாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment