திருத்தப்படாமல் மோசமான நிலையில் மட்டு விஜயபுர வீதி!

கடந்த 40 வருங்களுக்கு மேலாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் காணப்படும் விஜயபுரம் விகாரை குறுக்கு வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக அவ்வூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியூடாக தினமும் மாமாங்கம், கூழாவடி, சீலாமுனை, கருவேப்பங்கேணி, இருதயபுரம், புன்னைச்சோலை ஆகிய ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்வதோடு, மாநகரசபையின் கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களும் பல தடவைகள் தினமும் இவ்வீதியாலேயே பயணிக்கின்றன.
சமீப சில நாட்களுக்கு முன்னர் இவ்வீதியின் நடுப்பகுதி திட்டமிடப்படாத வகையில் செப்பனிடப்பட்டு வீதியின் இரு அந்தங்களும் புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாக மோசமான நிலையில் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு, விஜயபுரம் வீதியின் சவக்காலை சந்தி, மற்றும் கூழாவழவடி புகையிரக்கடவை வரையான சுமார் 800 மீற்றர் தூரமான பகுதி திட்டமிடப்படாத வீதி நிர்மாணத்தால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் இவ்வீதியின் இரு முன்னரங்கப் பகுதிகளிலும் தேங்கி நிற்கும் 3, 4 அடி நீரின் காரணமாக மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள், நோயாளிகள், முதியவர்கள் போன்றோர் பெரிதும் பாதிப்புறுகின்றனர்.
இது தொடர்பாக மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மாநகர ஆணையாளருக்கும் ஏற்கனவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் கிராம மக்கள், இது தொடர்பாக அக்கறையுள்ளோர் கவனமெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
திருத்தப்படாமல்நிலையில்மட்டு.மோசமானவிஜயபுரவீதி
Comments (0)
Add Comment