திருமலையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்கு கேரளா கஞ்சா கொண்டு சென்ற இருவரை, நேற்றிரவு (16) இரவு 11 மணியளவில், ஸ்ரீ போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 37 மற்றும் 42 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் 2 கிலோவும் 150 கிராமுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்படி கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர்களைக் கைதுசெய்ததாக, போதைப்பொருள் பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி ஜனேஸன் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள், திருகோணமலை தலைமையக
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

கஞ்சாகிண்ணியாகேரளாதிருகோணமலைபோதை
Comments (0)
Add Comment