திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்றைய தினம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விஜித்தபுர, உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் மகள் இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளதாக அறிந்ததையடுத்து மூர்க்கத்தனமாக தனது மகளை அவர் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.