திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பலவிதமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக கல்விச் சமூகத்தினை மட்டுமல்லாது அதன் சுற்றுச் சூழலினையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் திருகோணமலை கடற்கரைப் பகுதியை சுத்தமாக்கும் பணிகள் நேற்று கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் முன்னெடுக்கப்பட்டது.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் திருகோணமலை நகராட்சி மன்றத்துடன் இணைந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் இவ் செயல்திட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதேவேளை, நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த செயல்த்திட்டமானது ஒவ்வொரு மாதமும் முன்னெடுக்கப்படும் என கல்லூரியின் அதிபர் ஏ.வி அல்பிரட் தெரிவித்தார். இதில் பெரும் திரளான மாணவர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன்விரும்பிகள் பங்கேற்றிருந்தனர்.