தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறும் என்று முன்னதாக கூறப்பட்டிருந்தது.

எனினும் இன்றைய கூட்டத்தில் சம்மந்தனினால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து எதிர்வரும் ஆறாம் திகதி இந்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றையதினம் வேட்பாளர் தெரிவு மற்றும் தொகுதி பங்கீடுகள் தொடர்பில் உறுதியாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அடைக்கலநாதன்கூட்டமைப்புகூட்டம்சந்திப்புசெல்வம்தமிழ்தீர்மானம்தேசியதொகுதிபங்கீடுபேச்சுவார்த்தை
Comments (0)
Add Comment