சென்னை அணி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், மும்பை அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.
தொடர்ந்து சென்னை அணியில், தொடக்க வீரர்கள் வாட்சன், ராயுடு ஆகியோர் ஏமாற்றமடையச் செய்தனர். சுரேஷ் ரெய்னா 4 ரன்களிலும், தோனி 5 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், தனி ஒருவராகப் போராடிய பிராவோ, மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 68 ரன்களைக் குவித்தார்.
ஆனால், கடைசி ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ஜாதவ், சிக்சர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன்மூலம், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.
பின்னர் ஆட்டநாயகனாக பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டாலும், காயத்துடன் பினிஷிங் செய்த ஜாதவுக்கு பாராட்டு மழை குவிந்தன.
பின்னர் போட்டி குறித்து பேசிய ஜாதவ், “மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆனால், உடல் காயத்தால் வருந்துகிறது. இன்னும் 2 வாரங்களுக்கு விளையாட மாட்டேன் என நினைக்கிறன். வெற்றி வாய்ப்பை பிராவோ கொடுத்தார்.
ஆனால், என்னால் ஓட முடியவில்லை. அதனால், இம்ரானிடம், 6 பந்துகளையும் நானே பேட்டிங்
ஒரே ஒரு பெரிய ஷாட் மட்டுமே தேவைப்பட்டது. எனது உடலால் எப்படி தாக்குப்பிடிக்க முடிகிறது என முதலில் பார்த்துக் கொண்டேன்” என்றார் ஜாதவ்.