தமது கோரிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்த தீர்வும் இல்லை எனவும், நவ்ரூ தீவில் இவர்கள் தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் ஆயிரம் நாள் என்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நவ்ரூ தீவில் 470 அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகளவான அகதிகள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன..
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அகதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியதாகவும் அவர் தெரிவித்தார்.