வரும் 13ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்காக ஆஸ்திரேலிய அணியினர் வாய்மூடி அமைதியாக இருக்க வேண்டியதில்லை என்றும், ஆடுகளத்துக்கு வெளியே முன்பு போலவே தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாகக் கூறுவோம் என்றும் தெரிவித்தார்.