நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது..

அவுஸ்ரேலியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய ஒன்பது இலங்கையர்கள் நேற்றைய தினம்  சிறப்பு விமானமொன்றின் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர்.

குறித்த  விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து அவுஸ்ரேலிய அதிகாரிகளால் குறித்த  ஒன்பது பேரும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்  ஒன்பது பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம்   விசாரணை மேற்கொண்டுவருவதாக தெரிவிகப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் முந்தல், கொச்சிக்கடை, உடப்பு, சிலாபம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என   தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலியாஒன்பது பேர்குற்றப் புலனாய்வுப் பிரிவுகைதுபுகலிடம்
Comments (0)
Add Comment