நாளை வடமாகாண சபையை கண்டித்து வேலையற்ற பட்டதாரிகள் முற்றுகைப் போராட்டம்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரசாங்க வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 70ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்கின்றது.

இன்றைய போராட்டம் “பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சை யாரைப் பரீட்சிக்க பல்கலைக்கழகத்தையா? விரிவுரையாளர்களையா?” என்ற பிரதான கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமக்கான வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காத வடமாகாண அரசைக் கண்டித்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 09 மணி முதல் கைதடியிலுள்ள வடமாகாண சபையை முற்றுகையிட்டுப் பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்த முடிவு செய்துள்ளனர்.

குறித்த போராட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் இன்று முதல் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் ஒட்டப்படவுள்ளன.

இன்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,முதலமைச்சர்களின் 33ஆவது மாநாடு நேற்றைய தினம் ஹபரணையில் இடம்பெற்ற போது வடக்கு மாகாண முதலமைச்சர் எமது போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டு சென்றுள்ள நிலையில், ஜனாதிபதி எமக்கு விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி மொழி வழங்கியுள்ளார்.

இருந்த போதும் எத்தனை நாட்களில் எங்களுக்கான நியமனம் வழங்கப்படும் என ஜனாதிபதியால் இதுவரை எழுத்து மூலமான உறுதிமொழிகள் எதுவும் வழங்கப்படாமை ஏமாற்றமளிக்கிறது.எங்கள் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 70 நாட்களாகும் சூழலில் நாங்கள் தொடர்ந்தும் நடுத் தெருவில் நிற்க வேண்டும் என்பதனைத் தான் எங்களுடைய வடமாகாண அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் தொடர்ந்தும்

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 90 வீதம் உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில் எங்களுடைய முதலமைச்சரும், அமைச்சர்களும் அசமந்தப் போக்கில் செயற்படுவது ஏமாற்றமளிக்கிறது என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

அரசாங்க வேலைஇலங்கைகவனயீர்ப்புப் போராட்டம்கைதடிவடமாகாணம்வேலையற்ற பட்டதாரிகள்
Comments (0)
Add Comment