வழமையாக கடலுக்குள் படகுகளைத் தள்ளிவிடும் ஏறாவூர் – தளவாய், சின்னத்தம்பி வீதியைச் சேர்ந்த 35 வயதான கிட்ணப்பிள்ளை கண்ணன் சனிக்கிழமை இரவும் தளவாய் கடற்கரைக்குச் சென்று படகுகளை கடலுக்குள் தள்ளிவிடும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார்.
மாலை ஏழு மணியளவில் இவரும் மற்றொருவருமாகச் சேர்ந்து படகொன்றை கடலுக்குள் தள்ளிவிடும் போது மற்றையவர் கரையேற இவர் விழுந்து விட்டார்.
மற்றையவர் கூப்பிட்டுத் தேடியும் கடலலை இவரை இழுத்துச் சென்று விட்டதால் கடலுக்குள் விழுந்தவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையிலேயே மீனவர்கள் அவரின் சடலத்தைத் தேடிக் கண்டுபிடித்தனர்.
இறந்தவர் சம்பவ தினத்தன்று சற்று அதிகமாக மது அருந்தியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இறந்தவரின் மனைவி மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீ பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.