பொலிசாரால் சுட்டுபடுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்சன் ஞாபகார்த்த மாக அமைக்கப்பட இருக்கும் பஸ் தரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைய தினம் கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தில் இடம்பெற்றது.
சுன்னாகம் பொதுநூலகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ள குறித்த பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன், வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் தலைவர் பிரகாஸ் ,வலிதெற்கு பிரதேசசபை செயலாளர்,சுலக்சனின் குடும்பத்தினர்,உறவினர்கள் ,பல்கலைக்கழக நண்பர்கள்,எனப் பலரும் கலந்துகொண்டனர்.