படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக இசை வெளியீடு!

யாழ். கொக்குவில் பகுதியில் 2016-10-20 அன்று பொலிசாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களான சுலக்சன் , கஜன் ஆகியோரின் 45ம் நினைவு நாளினை முன்னிட்டு நேற்றைய தினம் இரு வெட்டு வெளியீட்டு வைக்கப்பட்டதோடு வீதியும் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகள் சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்சனான் இல்லத்தில் சுலக்சனின் சிறய தாயாரும் முன்னாள் போராளியுமான சிறி தலமையில் இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் வீதிக்கான பெயர்பலகையினை திறந்து வைத்து விசேடமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நிகழ்வுகள் இடர்பெற்றன.

குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா , எம்.ஏ.சுமந்திரன் , ஈ.சரவணபவன் ஆகியோருடன் பல்கலைக் கழக மாணவர்கள் குடும்பத்தார் மற்றும் உறவுகளும் கலந்து கொண்டனர்.

இசைகூட்டமைப்புபடுகொலைமாணவர்கள்யாழ்ப்பாணம்வீதிகள்
Comments (0)
Add Comment