ஆனால் தமிழ் மக்கள் அங்கே இன்றளவும் மீள்குடியேற்றப் படவில்லை. இந்நிலையில் எல்லை கிராமங்களை நாம் எப்படி பாதுகாக்க போகிறோம்? என மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் கேள்வி எழு ப்பியுள்ளார்.
வடமாகாணசபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முதலமைச்சரின் அமைச்சுக்கான நிதி ஒ துக்கீட்டின் மீதான 2ம் நாள் விவாதம் நேற்று நடைபெற்றபோதே உறுப்பின சிவநேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் நொடர்பாக மேலும் அ வர் குறிப்பிடுகையில்,
பண்டாரவன்னியன் 60 அன்னியர்களை போரில் கொன்ற இடத்தை நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்காமல் அங்கே குப்பை கொட்டி வருகிறோம். இப்படி 60 அன்னியர்கள் ஒரு தடவையில் வேறு எங்கும் கொல்லப்படவில்லை.
இதே போல் தமிழ், முஸ்லிம் மக்கள் பாரம் பரியமாக விவசாயம், மீன்பிடி செய்த தண்ணிமுறிப்பு குளத்தில் மணலாறு பகுதியில் குடியேற்றபட்ட சிங்கள மக்கள் பங்கு கேட்கிறார்கள்.
தாம் 1984 ம் ஆண்டு தொடக்கம் அங்கு மீன் பிடி ப்பதாக முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறுகிறார் கள். ஆனால் உண்மை அதுவல்ல. இந்நிலையில் தண்ணிமுறிப்பு குளத்தை சுற்றி உள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை.
இந்நிலையில் மாகாணசபை அபிவிருத்தி திட்டங்களை எல்லை கி ராமங்களக நோக்கி விரிவு படுத்துங் கள், மேலும் எல்லை கிராமங்களில் மக்களை மீள்குடியேற்றுங்கள் என்றார்.