பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மாணவிக்கு வீடு அமைத்துக் கொடுக்க ஏற்பாடு…

இலங்கைக்கு முதல் வெண்கல  பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மாணவி பாரமிக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ,

பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில்  குறித்த சிறுமி  மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகர நேற்றைய தினம் இதற்கான  காசோலையை   வழங்கியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சிறுமிபதக்கம்பரிசுவண்கலம்வீடு
Comments (0)
Add Comment