கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணியை தம்மிடம் மீள கையளிக்குமாறு கோரி மக்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க அதிபரின் மேல் அதிகாரிகள் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.இந்தக்கலந்துரையாடலை தொடர்ந்து ஆர்பாட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இராணுவத்தரப்பு மற்றும் ஜனாதிபதி போன்ற உயர் மட்ட குழுக்களிடம் கலந்துரையாட உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார். மேலும், இது தொடர்பான மனுவினை எதிர்வரும் செவ்வாய் கிழமை அரசாங்க அதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மக்கள் திருப்த்தியடையாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.