அண்மையில் விஞ்ஞான பீட புகுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, சிங்கள மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
விஞ்ஞான பீடம் மற்றும் கலை, வணிக முகாமைத்துவ பீடங்களின் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் மாத்திரம் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.
பெரும்பாலான கல்விப் பீடங்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சிங்கள மாணவர்கள் விரிவுரைகளுக்கு வரவில்லை.
மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை, தாம் தமது பிள்ளைகளை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.