கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினிபஸ் எழுதுமட்டுவாழ் சந்தியிலிருந்து கிளாலி வீதிக்குத் திருப்புகையில், யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்துடன் மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மினிபஸ் கவிழ்ந்தது, அதன் சாரதி மற்றும் ஓட்டுநர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை ஸ்ரீலங்கா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.