பாடசாலைக்கு செல்லாதவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை!

கிளிநொச்சி நீதிமன்றம் , மாவட்டச் செயலகம் கூட்டினைந்து   சாந்தபுரம் கிராமத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் 18 பேர் நேற்றைய தினம் இனம்காணப்பட்டு மாவட்டச் செயலகம் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் தேவைகள் பூர்த்தியாக்கி மீண்டும் பாடசாலையில் இணைக்க நடவடிக்கை எடுத்ததாக மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மாவட்டச் செயலக சிறுவர் உத்தியோகத்தர் உள்ளிட்ட 15 பணியாளர் கள் , நீதிமன்றம் , பொலிசார் கூட்டினைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மேற்படி 18 பாடசாலை செல்லாத மாணவர்கள் இனம்கானப்பட்டு பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் தண்டிப்பது நோக்கமல்ல அவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதே சகல திணைக்களத்தினதும் நோக்கமாக இருந்தது. இருப்பினும் சில மாணவர்கள் பாடசாலை செல்லாத்தற்கு நியாயபூர்வ காரணங்களும் காணப்பட்டன அவற்றினையும் பிரதேச செயலகம் ஊடாக நிவர்த்தி செய்ய பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் இனம்கானப்பட்டால் இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் அத்துடன் இனம்கானப்படும் சிறுவர்களின் பெற்றோருக்கே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.

அரச அதிபர்இணைப்புகிளிநொச்சிநீதிமன்றம்பாடசாலைமாவட்ட செயலகம்
Comments (0)
Add Comment