பாம்பை காப்பாற்ற முற்பட்டவருக்கு பாம்பு கடித்து மரணம்!

வாகனமொன்றில் மோதுண்ட பாம்பொன்று உயிருக்குப் போராடிய நிலையில், வீதியில் துடித்தக் கொண்டிருந்த பாம்பை, மனிதாபிமான முறையில் கையினால் எடுத்து காட்டுக்குள் விடுவதற்கு முயன்ற நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம், மூதூர் வேதந்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மூதூர், பாலநகரைச் சேர்ந்த அல்ஹாஜ்  அப்துல் வாஹீத் (வயது 60) என்பரே, பாம்பு தீண்டி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடிதிருகோணமலைபலிபாம்புவிபத்து
Comments (0)
Add Comment